ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய சுவாமி” ஜெயந்தி விழா!
![]()
சேலம்
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய சுவாமி” ஜெயந்தி விழா!
சேலம் வெண்ணந்தூர் மின்னக்கல் பொன் சூரிய மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் “ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய சுவாமி” திருக்கோயிலில் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விசுவாச வருடம் மார்கழி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை அமாவாசை திதி, மூலம் நட்சத்திரம், அமிர்த யோக கூடிய சுபயோக சுபதினத்தில், “ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி” விழா, அருள்மிகு “ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய” சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய சுவாமி அருளை பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியினை, ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் நிர்வாக குழு சிறப்பாக செய்திருந்தனர்.

