மேம்பாலம் கட்டும் பணிகள் ஆட்சியர்மு.பிரதாப் ஆய்வு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், செவ்வாய்பேட்டையில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளையும், திருநின்றவூர்-வேப்பம்பட்டு ரயில் நிலையம் இடையே ரூ.56 கோடி மதிப்பீட்டில் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான பணிகளுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அதனை களைவதற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 16 கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் தேசிகன், நெடுஞ்சாலைகள் துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

