கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டி

Loading

கோவை
கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டி
கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான, கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்களற்க்க உள்ளனர் இதற்கான மெடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்.
தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி ஆண்டு தோறும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,
இதற்கான மெடல் மற்றும் ஆடை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதனை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்  நிர்வாக இயக்குநர் வி. நௌஷாத் கூறியதாவது.. கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பிற்காக கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையுடன் மீண்டும் ஒருமுறை கூட்டு சேருவதில் வாக்கரூ பெருமை கொள்கிறது எனவும், இந்த ஆண்டு பிரமிக்க வைக்கும் வகையில் 25,000 பேர் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் கோயம்புத்தூர் மக்களின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது வகையில் இந்த மாரத்தான் நடைபெறும், என தெரிவித்தார்..
தொடர்ந்து சிசிஎஃப் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் பாலாஜி கூறியதாவது.. “கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் 13வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 21ம் தேதி, நடைபெற உள்ளது, 4 பிரிவுகளாக நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில்,
பங்கேற்பாளர்களுக்காக உதவி நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள், பாதை வரைபடங்கள், வழிகாட்டும் தன்னார்வலர்கள், மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பந்தயத்தை நிறைவு செய்பவர்களுக்கு சிற்றுண்டி வசதிகள் வழங்கப்படும். மேலும், பந்தய முடிவுகள் மற்றும் தனிப்பட்ட நேரங்கள் டைமிங் சிப்ஸ் மூலம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படும்.
.மொத்த பரிசுத் தொகையான ரூ.3.85 லட்சம் ரூபாய் அறிவிக்க பட்டுள்ளது. இந்த தொகை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியின் பொழுது மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் இயக்குனர்
ரமேஷ் பொன்னுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0Shares