அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Loading

இ – பைலிங்கை முறையை தடை செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் அனைத்து  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் டிச 19 : நீதிமன்றங்களில் இ – பைலிங் முறையை தடை செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் பகுியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கூட்டமைப்பு சார்பில் கடந்த 2 முதல் 12 வரை இ–பைலிங் முறையை தடை செய்ய கோரி நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நீதிமன்றங்களில் இ – பைலிங் முறையில் சரியான கட்டமைப்பு ஏற்படுத்தாததால் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.  மேலும், மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில், கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காத நிலையில், இ-பைலிங் நடைமுறையை தடை செய்ய வேண்டும். கையேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.  வக்கீல்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
0Shares