87பயனாளி10.15 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅவர்கள் முன்னிலையில், 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா அவர்கள், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 45 நபர்களுக்கு ரூ.8.80 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 27 நபர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.1.35 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்ததாவது:
ஒரு நல்ல நாள். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் உலகமெங்கும் டிசம்பர் 18 ஆம் நாளை சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக கொண்டாடி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்கென அமைக்கப்பட்ட “தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நமது நாட்டிலும் இவ்விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிறுபான்மையினர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. அதனுடைய மாவட்ட அலுவலகமாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் என பல்வேறு மதத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உலமாக்கள் மற்றும் இதரப்பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் செயல்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 535 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 30 உறுப்பினர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக ரூ.1,200/-ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிந்து வரும் உபதேசியார்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டு, தற்போது வரை 250 உறுப்பினர் சேர்க்கப்பட்டு நல வாரிய அட்டைகளும், சிறுபான்மையினர் பெண்கள் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் முன்னேற்றம் அடையும் வகையில், மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகிறதுநீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று (18.12.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா அவர்கள், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 45 நபர்களுக்கு ரூ.8.80 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 27 நபர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.1.35 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்ததாவது:
இன்று ஒரு நல்ல நாள். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் உலகமெங்கும் டிசம்பர் 18 ஆம் நாளை சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக கொண்டாடி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்கென அமைக்கப்பட்ட “தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நமது நாட்டிலும் இவ்விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிறுபான்மையினர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. அதனுடைய மாவட்ட அலுவலகமாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் என பல்வேறு மதத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உலமாக்கள் மற்றும் இதரப்பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் செயல்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 535 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 30 உறுப்பினர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக ரூ.1,200/-ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிந்து வரும் உபதேசியார்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டு, தற்போது வரை 250 உறுப்பினர் சேர்க்கப்பட்டு நல வாரிய அட்டைகளும், சிறுபான்மையினர் பெண்கள் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் முன்னேற்றம் அடையும் வகையில், மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகிறதுஇந்நிகழ்ச்சியி ல், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்/பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) லோகநாயகி, உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் திரு.ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், மாவட்ட தலைமை காஜி முஜிபுர் ரகுமான், கௌரவ செயலாளர்கள் (முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்) சாதிக், (கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம்) ஸ்டெல்லா சாம்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்