இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம்3-நாள் மாநாடு
![]()
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம், இந்திய ராணுவ தலைமை தளபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி அரசு தூதர்கள், ராணுவ அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, உலகளாவிய மாற்றங்களை இந்தியா எவ்வாறு தனக்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதன் தொடக்க விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் வரவேற்புரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த தளம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனைப் புள்ளியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இதில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வியூகம், பாதுகாப்பு மற்றும் ஆட்சித்திறன் எனும் மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறும் என்று கூறினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டான 2047-க்குள், நாட்டை ஒரு முற்றிலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இந்திய அரசின் ஒரு தொலைநோக்கு குறிக்கோளான ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை அடைவதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது என கூறிய அவர், அவர்களை இந்த நிகழ்வில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ரைசெட் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் செயல் தலைவர் டாக்டர் குல்ஷன் ராய் இணையவழி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.
மேலும் டாக்டர் குல்ஷன் ராய், , இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ரைசெட் இணையதளத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவின் நிறைவாக குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபேஷ் சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றி இன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

