ஓய்வூதியர்சங்கங்க கூட்டமைப்பு ஓய்வூதியர் தின விழா

Loading

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா. 
சேலம்.டிச.18
சேலம் கோட்டை மைதானம் அருகில் அமைந்துள்ள சூசன் மஹாலில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17 அன்று ஓய்வூதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வரவேற்புரையும், மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி துவக்க உரையாற்றினார். ராஜகோபாலன், கலைச்செல்வன், மணிமுடி, சேப்பெருமாள், சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.‌ கணேசன், அருணகிரி நன்றியுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில், ஓய்வு தேதி அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியத்தில் வேறுபாடு கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0Shares