தீக்காயம் ஏற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி
![]()
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீக்காயம் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 18 : பேரம்பாக்கம் பகுதியில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் சத்யா மற்றும் அஞ்சு ஆகியோரை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் தீப்பம்பட்டி வே.ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டம் ஜே.என்.சாலை, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் சிறப்பு நூலகத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி, அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) சரண்யா, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் ஹரிஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தரி(வ.ஊ), உதவி பொறியாளர் அருள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

