போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஐந்து பேர் கைது

Loading

கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஐந்து பேர் கைது : திருவள்ளூர் மாவட்டத்தில் 373 கிராம் மெத்தாம்பெட்டமைன், 48 எம்டிஎம்ஏ மாத்திரைகள்  மற்றும் 2.8 கிராம் கோகைன் பறிமுதல் :

திருவள்ளூர் டிச 18 : பிற மாநிலங்களில் இருந்து  போதைப்பொருட்களின் கடத்தலை கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிகளின் தொடர்ச்சியாக, மாநில எல்லைகளைக் கடந்து சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தும் கும்பல்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான செயற்கை போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மெத்தாம்பெட்டமைன், எம்டிஎம்ஏ, கோகைன் போன்ற போதைப்பொருட்களைக் கடத்தி விநியோகம் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில்  அவர்கள் சந்தோஷ் (24), நடராஜ் (25), கிஷோத் குமார் (24), தவசி (24) மற்றும்  சுந்தரபாண்டியன் (24) என தெரியவந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 373 கிராம் மெத்தாம்பெட்டமைன், 48 எம்டிஎம்ஏ மாத்திரைகள் (30 கிராம்) மற்றும் 2.8 கிராம் கோகைன் மீட்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்  போதைப்பொருட்களைக் கடத்தும் கும்பல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி விவேகானந்தா சுக்லா தெரிவித்துள்ளார்.
0Shares