மு.பிரதாப் & வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு

Loading

 

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பெரியகுப்பம், இரயில் நிலையம் அருகிலுள்ள மகாத்மா காந்தி நகர் பகுதி மக்கள் 6-வது இரயில்வே பாதைக்கு அருகில் இரயில்வே துறையால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பாதையை கடந்து, கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வழிப்பதையாக பயன்படுத்தி வருகின்றனர். இரயில்வே நிர்வாகம் மேற்கண்ட வழியில் இரு புறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க ரயில்வே துறையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அப்பாதையினை மூடக்கூடாது என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, காவல்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares