விளையாட்டு உபகரணங்கள் சா.மு.நாசர் வழங்கினார்
![]()
ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் பகுதிகளை சேர்ந்த 318 நகர்புற வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 555 தொகுப்புகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 17 : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை திருவள்ளுர் மாவட்டம், ஜே.என்.சாலை பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 555 தொகுப்புகளை ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் பகுதிகளை சேர்ந்த 318 நகர்புற வார்டுகளுக்கு வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 நகர்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வாகனங்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படும். மேலும் இவ்விளையாட்டுப் பொருட்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், “ஆடுகளம்” மொபைல் செயலி மேம்பாட்டு விளையாட்டு வடிவமைக்கப்பட்டு தற்போது Google Play Store ஆணையத்தால் இல் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இச் செயலியின் மூலம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் இருப்பு நிலை விநியோகம். பயன்பாடு, மற்றும் தினசரி புதுப்பிப்புகளை ஆன்லைனில் கண்காணித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் ஒவ்வொரு வார்டின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் மூலம் பாதுகாப்பாக உள்நுழைந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 318 வார்டுகளுக்கும் தனித்தனியாக பயனர் குறியீடுகள் மற்றும் கடவுச்சொற்கள் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் நிலுவையில் உள்ள இருப்பைப் பதிவேற்றி கண்காணிக்க இயலும். “ஆடுகளம்” செயலியை Google Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் இருப்புப் பதிவேட்டை வார்டு வாரியாக அந்தந்த வார்டு பொறுப்பாளர்கள் தினசரி புதுப்பித்து பராமரிக்க வேண்டும். இச்செயலியின் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு தங்கள் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாதந்தோறும் சீராய்வு செய்யப்படும்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூ ர்),எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வி.சேதுராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜெயகுமார், நகராட்சி ஆணையர்கள்,பேரூராட்சி செயல் அலுவலர்கள், விளையாட்டு பயிற்றுநர்கள் மற்றும் திரளான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

