பொள்ளாச்சியில் மினிஸ்டர்ஒயிட்58வதுஷோரூம்திறப்பு

Loading

கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்மினிஸ்டர் ஒயிட்-ன் 58வது பிரத்யேக ஷோரூம் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எம்.சின்னசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
ஆண்களின் பாரம்பரிய உடைகளுக்கான நம்பிக்கைக்குரிய நிறுவனமாக, திகழும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில், பண்பாட்டு மரபும், வணிக வளர்ச்சியும் இணைந்த நகரமான பொள்ளாச்சியில் தனது 58-வது பிரத்யேக ஷோரூமை திறந்துள்ளது. 
பொள்ளாச்சி, முதல் உடுமலை சாலையில்  அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம், மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது.
இந்த ஷோரூமை வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எம்.சின்னசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
அதை வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் கே.நித்தியானந்தன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக உலக சமூக சேவை மையத்தின் கிராம சேவைத் திட்ட இயக்குனர் முருகானந்தம், வியாபாரி சங்க தலைவர் சக்திவேல், அரிமா சங்க பிரமுகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி தொழில்துறையினர் பங்கேற்றனர்.
நிகழ்வு பற்றி ஒட்டோ க்ளோதிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும்  தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ். போத்திராஜ் கூறியதாவது.. “தமிழகத்தின்  மிகவும் உயிரோட்டமுள்ள பாரம்பரிய சந்தைகளில் ஒன்று பொள்ளாச்சி.. குடும்ப விழா, கோவில் திருவிழா, சமூக நிகழ்வு எதுவாக இருந்தாலும், மரபும் அழகும் இணைந்த ஆடைகளை பெருமையுடன் அணிவது பொள்ளாச்சி மக்களின் இயல்பு. இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கும் உயர்தரம், வசதி, மற்றும் காலத்தோடு கூடும் பாரம்பரிய ஸ்டைலை வழங்குவதுதான் எங்கள் நோக்கம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்  மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சுரேஷ் ராமசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares