1.32கோடிமதிப்பீட்டில்நடைபெற்றுவரும்வளர்ச்சிதிட்டம்
![]()
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி சார்பிலும், ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பெரிய உபதலை பகுதியில் 2025-2026 ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல், 2025-2026 ஆம் ஆண்டில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பில் மேற்கூரையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டில் தூய்மை பாரத இயக்கம் பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் பாறைக்குழியில் நுண் உர கிடங்கு கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதனை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட சிம்ஸ்பூங்கா அருகில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணிகளையும் பார்வையிடப்பட்டது.
இதன மூலம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இச் செய்தியாளர் பயணத்தின் போது, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

