தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3027 வழக்குகளுக்கு தீர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3027 வழக்குகளுக்கு தீர்வு : ரூ.24 கோடியே  76 லட்சத்து 61 ஆயிரத்து 481 ரூபாய்க்கு தீர்வு ;
திருவள்ளூர் டிச 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 3593 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு வழக்குகள் 2812 முடிக்கப்பட்டு தொகைக்கு தீர்வு காணப்பட்டது.ரூ. 216809349 நிலுவையில் அல்லாத 215 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 215 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.30852132 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 3808 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3027 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.-247661481/- தொகைக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான டாக்டர். ஜெ.ஜூலியட்புஸ்ப்பா திருவள்ளூர் கிளைச்சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகளுக்கு புத்தகங்களை திருவள்ளூர் கிளை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி, சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான உமா மகேஸ்வரி,சிறப்பு துணை நீதிபதி மற்றும் மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன்,சிறப்பு துணை நீதிபதி மற்றும் நில அபகரிப்பு கீழ் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நளினிதேவி,மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஷோபாதேவி,கூடுதல் உரிமையியல் நீதிபதி வினோ,குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் சுனில் வினோத் ராஜேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares