மாணவியின் வகுப்பை மாற்றியதால் தற்கொலை

Loading

திருவள்ளூர் அருகே சட்டக் கல்லூரியில்  மாணவியின் வகுப்பை கல்லூரி நிர்வாகம் மாற்றியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை : 

திருவள்ளூர் டிச 14 : திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் பாரதி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள டிஎம்ஐ ஜோசப் என்ற தனியார் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நான்காம் ஆண்டு பயின்ற மாணவி பாரதி பி பிரிவில் பயின்று வந்த நிலையில் திடீரென கல்லூரி நிர்வாகம் பாரதியை ஏ பிரிவிற்கு மாற்றியுள்ளது,பி பிரிவில் பயின்று வந்த மாணவிக்கு வகுப்பில் நண்பர்கள் பலர் இருந்த நிலையில் ஏ பிரிவிற்கு மாறுவதற்கு மாணவி பாரதி மறுத்து தனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்துச் சென்று பிரிவை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுள்ளார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் வகுப்பை மாற்ற மறுத்ததால் மகளுக்கு டீசி வழங்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் டிசி வேண்டுமென்றால் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே டி சி கொடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் தான் பயின்ற பழைய வகுப்பில் இருந்த நண்பர்களை பார்க்க முடியாது வேறு கல்லூரிக்கும் சென்று சேர்வதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் அறையில் திடீரென தூக்கிட்டு கொண்டதை கண்ட பெற்றோர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பாரதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாரதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மனமடைந்த பாரதியின் தாய் கதறி அழுதபடி சாலையில் படுத்து உருண்டு அழுத காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது, மேலும் தனது மகள் உயிரிழப்பிற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாய் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து மணவாள நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது சட்டப் படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்காட வேண்டிய மாணவி கல்லூரி வகுப்பு மாற்றியதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
0Shares