3,402மகளிருக்கு வங்கி பற்றுஅட்டைகளை வழங்கினார்

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கிரேஸ்ஹில், அந்தோணியார்  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள் முன்னிலையில்  3,402 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/-ஆண்டொன்றிற்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கிட தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1,16,000 மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்ட விரிவாக்கத்தினை தொடர்ந்து, கடந்த 15.07.2025 முதல் 14.10.2025 வரை நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப்பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,402 மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியுடைய மகளிரும் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மகளிர் உரிமைத்தொகை அவர்களுக்கும் கிடைக்கும் தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்தகல்கி, குன்னூர் நகர்மன்ற தலைவர்  சுசீலா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜா, உதவி பொது மேலாளர் வெங்கடாச்சலம், மேலாளர் ரவி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)  ஜெயராணி, குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம்ராஜா, ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், குன்னூர் வட்டாட்சியர் ஜவகர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  காயத்ரி, திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares