துணை முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 

Loading

கழக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு தமிழக துணை முதல்வர் – இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலினஅவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
 நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில் நகர செயலாளர் எம். ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், துணை முதல்வர் அவர்களின் மக்கள் பணிகள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்ட கழக அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் Expo செந்தில், சுனிதா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்,  பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ், சஞ்சீவ், மார்டின், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், காலிதாசன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் வெங்கடேஷ், ஜெயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார், குன்னூர் நகரமன்ற தலைவர் சுசீலா, தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், கலீம் உட்பட நகர கழக நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட – நகர துணை அமைப்பாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள் – செயலாவீரர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவில் குன்னூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் செய்யது மன்சூர் நன்றி கூறினார்.
0Shares