நாமக்கல் மகா கால பைரவாஷ்டமி பெருவிழா! 

Loading

நாமக்கல்
மகா கால பைரவாஷ்டமி பெருவிழா! 
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மல்லூரில் அமைந்துள்ள தென் திருஅண்ணாமலை அருள் தரும் உண்ணாமுலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அண்ணாமலைப்பட்டி மகா கால பைரவாஷ்டமி பெருவிழா கார்த்திகை 26ம் நாள்,  வெள்ளிக்கிழமையன்று, கோல கால பைரவருக்கு திருநெறிய தீந்தமிழ் திருமுறைகள் ஓதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழானை, தென் திருவண்ணாமலை சிவனடியார்கள் திருகூட்டம், திருவண்ணாமலைபட்டி, சிறப்பாக செய்திருந்தனர்.
0Shares