10.5 இடஒதுக்கீடுபா.ம.க./வன்னியர்சங்கம்ஆர்ப்பாட்டம்

Loading

ஈரோடு:
10.5% இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பா.ம.க./வன்னியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்: 
ஈரோட்டில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
 வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் காளை மாட்டு சிலை அருகே மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில், ஈரோடு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0Shares