சேலம் வீரபாண்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் திருவிழா
![]()
சேலம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி “அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில்” திருவிழா!
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு “ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில்” திருவிழா, விசுவாவசு ஆண்டு கார்த்திகை மாதம் 23ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் புதன்கிழமையும் நடைபெற்றது.
விசுவாவசு ஆண்டு கார்த்திகை மாதம் 23ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று அருள்மிகு “ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு” சிறப்பு அபிஷேகமும், கோவில் வீட்டில் உற்சவ மூர்த்திக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் புதன்கிழமை அன்று “ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு” பொங்கல் வைத்தல், ஸ்ரீ பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லாக்கில் பவனி வருதல், சக்தி கரகம், பூங்கரகம், திருவீதி விழா வருதல், பெரும்பூஜை, அன்னதானம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவிழாவில், தர்மகர்த்தா, பூசாரி, ஊர் மூப்பன், ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு “ஸ்ரீ பத்ரகாளியம்மனை” வழிபட்டுச் சென்றனர்.

