மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி

Loading

வேப்பம்பட்டில் கடைக்கான விளம்பர போர்டை மாட்டும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் பலி :

திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் ஊர் காவல் படை வீரராகவும், தனியார் மருத்துவமனையில் காவலாளியாக இருந்தவர் தர்மேந்திரன் (45). இவர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் இவரது நண்பரான லால் சிங் என்பவர் ராசி கல் கடை இடம் மாற்றுவதற்கான ஏற்பாடு நடைபெற்று வந்த நிலையில் கடைக்கான விளம்பர போர்டை அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாட்டிய விளம்பர போர்டு மீது மேலே சென்ற மின்சார ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தர்மேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த தம்மேந்திரன்  குழந்தைகளின் கல்வி செலவு ஏற்பதாக நண்பர் லால்சிங் தரப்பில் தெரிவித்திருப்பதாகவும், அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரது சகோதரர் தெரிவித்தார்.
0Shares