சோனியாகாந்தி பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை
![]()
கோவை
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது..
டிசம்பர் 9ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாட பட்டு வருகின்றது. இவரது 79வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட மகளீரணி தலைவி சோபனா செல்வம் தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்க்கிள் தலைவர் கனேசன், ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சோனியா காந்தியின் பெயருக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார், சிங்கை செல்வராஜ், 54வது வார்டு தலைவர் செல்வராஜ், கருணாகரன், சிங்கை சுரேஷ், 59வது வார்டு தலைவர் மணிகண்டன், வார்டு செயலாளர் குமார், பறக்கும் படை ராஜ்குமார், பூபாலகிருஷ்ணன், அமுல்ராஜ், கனேசன், காந்தன், காலனி பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

