நீதிமன்றங்களில்இ-ஃபைலிங்முறையாக அமல்படுத்துக
![]()
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு நீதிமன்றங்களில் இ-ஃபைலிங்கை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சாலை மறியல் :
திருவள்ளூர் டிச 10 : திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நீதிமன்றங்களில் இ-ஃபைலிங்கை முறையாக அமல்படுத்த கோரி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர்.நிர்வாகிகள் ராம்குமார், எஸ்.கே.ஆதாம், மு.வ.சித்தார்த்தன், ஜார்ஜ்முல்லர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
அப்போது, போராட்டத்தில் நீதிமன்றங்களில் இ – பைலிங் (மின்னணு தாக்கல் முறை) முறையில் சரியான கட்டமைப்பு ஏற்படுத்த வில்லை, இதனால் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.குறிப்பாக இந்த டிஜிட்டல் முறைக்கு நடைமுறைச் சிக்கல்கள், தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த தகவல்களை சுட்டிக்காட்டியும் இந்த இ-ஃபைலிங் முறையை முறையை அமல்படுத்தும் வரை நீதிமன்றங்களில் கையேடு முறையை அமல்படுத்த வலியுறுத்தி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து, நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

