ஓடும் பேருந்தில் மாரடைப்பு பூ கட்டுபவர் உயிரிழப்பு

Loading

திருவள்ளூர் அருகே ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு பூ கட்டும் தொழிலாளி உயிரிழப்பு :
திருவள்ளூர் டிச 10 : திருவள்ளூர் அடுத்த  கரிகலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்  உமாபதி-39.  இவருக்கு சங்கீதா 36 என்ற மனைவியும்,  கலையரசன் (16) விஷ்வா  (14)  என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். உமாபதி திருவள்ளூர் பகுதியில் பூ மார்க்கெட்டில் பூ கட்டும் கூலி தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூ கட்டும் தொழிலுக்கு சென்ற அவர்  இரவு வீட்டிற்கு திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண் 505 பேருந்தில் பயணித்துள்ளார்,  பேருந்து ஓதிக்காடு பகுதிக்கு சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலே உமாபதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு பூக்கட்டும்  கூலி தொழிலாளி உயிரிழந்திருப்பது அவர் சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0Shares