திருவள்ளூரில் படைவீரர் கொடி நாள் நிதி வசூல்
![]()
திருவள்ளூரில் படைவீரர் கொடி நாள் நிதி வசூல் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவங்கி வைத்து, 24 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.7.36 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினார் :
திருவள்ளூர் டிச 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடி நாள் நிதி வசூல் தொடங்கி வைத்து, படைவீரர் கொடிநாள் நிதி கையெட்டினை வெளியிட்டு முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 24 நபர்களுக்கு ரூ.7.36 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கி பேசினார்.
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டை பாதுகாக்க எல்லையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் படைவீர்ரகள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் நலனுக்கு கொடிநாள் வசூல் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் இந்த ஆண்டு 110 சதவிகிதம் இலக்கு அடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் இலக்கான ரூ. 5.78 கோடியை விட, தற்போது ரூ.6.37 கோடி கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. நடப்பாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதியுதவி, ஆயுட்கால நிதி உதவிகள் என 279 நபர்களுக்கு ரூ.77.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் ஐ.என்.எஸ்.ராஜாளி கமாண்டன்ட் கார்த்திக், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ் குமார், படை வீரர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

