மக்கள் குறைதீர்க்கும் நாள்129 கோரிக்கை மனுக்கள்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கி 129 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சி வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.விஜயன் என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்பு பகுதியில் வீடு வேண்டி விண்ணப்பித்ததை தொடர்ந்து, உதகை ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கண்ணன் (கணக்குகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி. உதகை வட்டாடர வளர்ச்சி அலுவலர் lஉட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

