கொடிநாள்வசூல்ஆட்சியர் லட்சுமி பவ்யா துவக்கினார்

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடி நாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலினை  மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய நாட்டின் முப்படைகளில் பணியாற்றி, பாதுகாப்புப் படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாமல், தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும் நமது தாய்த்திரு நாட்டிற்காக அரும்பணியாற்றி வருகின்றனர். அவர்களது அயராத கடமைகளுக்கு நாம் காட்டும் நன்றியுணர்வின் வெளிப்பாடாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு-28-ம் தேதி அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சக குழுவினரால் டிசம்பர் மாதம் 07-ம் நாள் படைவீரர் கொடி நாள் தினமாக அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டது. நமது மாவட்டத்தில் கடந்த 07 டிசம்பர் 2024 தொடங்கி 06 டிசம்பர் 2025 வரை ரூ.1,15.82,474/- படைவீரர் கொடி நாள் நிதியாக மாவட்ட அரசுத்துறை அலுவலர்களால் வசூலிக்கப்பட்டது. இது அரசு நிர்ணயித்த இலக்கிற்கு 99 சதவீதமாகும். இந்த கொடி நாள் நிதியை திரட்டிய அனைத்து அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முப்படை வீரர்களின் கைம்பெண்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, 26 பயனாளிகளுக்கு ரூ.37,36,315/- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்களுடன் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், கர்னல் கோபாலகிருஷ்ணன் (இராணுவ மருத்துவமனை, வெலிங்டன்), லெப் கர்னல் .நரோத்தம் சர்மா (சீனியர் ஆவணக் காப்பாளர், மெட்ராஸ் ரெஜிமண்ட், வெலிங்டன்), லெப் கர்னல் .ஜான் டேனியல் (ஓய்வு), முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் சரவணன், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் திரு.இந்திரகுமார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares