தற்காலிக தூய்மை பணியாளர் நலவாரியத்தில் சேர்ப்பு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு :
திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தனியார் நிறுவனம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவில்கள், மயான பணியாளர்கள், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைபணியாளர்களும் இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் துவங்கப்பட்டு இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.
எனவே இந்த அறியவாய்ப்பினை அனைத்து தற்காலிக தூய்மைபணியாளர்களும் கருத்தில் கொண்டு இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் இப்பணிகளுக்காக முழுபங்களிப்பும் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, திருவள்ளூர் – 602 001 செல்.9445029475 மற்றும் 044-27665539 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

