மழை நீரில் குப்பை கொட்டியதால் துர்நாற்றம்

Loading

திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசும் அவலம் : 
திருவள்ளூர் டிச 08 : வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதன்படி திருவள்ளூர் அடுத்த காக்களூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
அதிலும் குறிப்பாக காக்களூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதுடன் குப்பை கழிவுகளும் அதன் கலந்து தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தெருக்களில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் நிற்பதால் அதில் வரும் பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகளால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்றும் குப்பை கழிவுகளோடு அடைக்கப்பட்டுள்ள கால்வாயை சீர்படுத்தி மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares