பெண்களுக்கு பாதுகாப்பை உருவாக்கவேண்டும்

Loading

கோவை
பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கவேண்டுமென வலியுறுத்தி 500 கிலோமீட்டர் . தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்ட கோவை அல்ட்ரா சைக்கிளிஸ்ட்
150 மைல் தூரத்தை சைக்கிளில் கடந்து பயணிக்கும் வீரர்களை அல்ட்ரா சைக்கிளிஸ்ட் என அழைப்பதுண்டு, அதே போல பல மைல் தூரத்தை கடந்து சாதனை செய்துள்ள கோவையை, சேர்ந்த அல்ட்ரா சைக்கிள் வீரர் ஜி.டி. விஷ்ணுராம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 500 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை  மேற்கொண்டார். இந்த தூரத்தை வெறும் 15 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவு செய்து சாதனையும் செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்”, “சைபர் குற்றங்களில் இருந்து விழிப்புடன் இருங்கள்” மற்றும் “போதைப்பொருட்கள் ‘நோ’ சொல்வோம்”   வேண்டாம் என்று சொல்லுங்கள்” ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கியக் கருப்பொருள்களாக அவர் தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து விஷ்ணுராம் செய்தியாளர்களிம் கூறியதாவது..  டிசம்பர் 6ஆம் தேதி இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை துவங்கியதாகவும், மறுநாள் டிசம்பர் 7ஆம் தேதி காலை கோவையில் தனது பயணத்தை நிறைவு செய்ததாகவும் கூறினார். இந்த விழிப்புணர்வு பேரணியை  இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தனுஷ்கோடியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாகவும், அங்கிருந்து இராமநாதபுரம், மதுரை, தேனி வழியாகக் கோவையை அடைந்ததாக தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் நிறைவு பகுதி  கோவை விமான நிலையம் அருகே துவங்கி கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் முடிவற்றது.
இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கோவை மாநகர காவல் ஆணையர் ஏ. சரவண சுந்தர், உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்று விஷ்ணுராம்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தன்னுடன் இந்த இறுதி பகுதியில் பயணம் மேற்கொண்ட அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விஷ்ணு ராம் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும், இந்த பயணம் கின்னஸ் சாதனைப் புத்தகம், ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெகார்டஸ் போன்ற சாதனைப் புத்தகங்களில் இடம்பெறும் ஒரு அதிகாரப்பூர்வ முயற்சியாக அமைந்துள்ளது எனவும் கூறினார்..
0Shares