வக்ஃப்&வழிபாட்டு உரிமையை காக்க ஆர்ப்பாட்டம்

Loading

கோவை
வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி – கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய  மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான  டிச.06ம் தேதியை  முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணைதலைவர் சிவக்குமார்
தலைமையில்  மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ்  வரவேற்புரையாற்றினார்.  மாவட்ட பொருளாளர் மீடியா மன்சூர்  தொகுத்து வழங்கினார்.
இந்த ஆர்பாட்டத்திற்க்கு
மாவட்டத் தலைவர் முகமது இசாக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தீக்,
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர்
கு ராமகிருட்டிணன்
ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.
இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட கலந்து கொண்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க கோஷமிட்டு முழக்கமிட்டனர்.
0Shares