பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா நிறுவனர் கடிதம்

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு.பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் நலன் கருதி தான் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

மேலும் டாக்டர் ஹென்றி நேரில் வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 26.09.2025 அன்று FAIRA கடித எண். 130/2025-ன் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

அந்த கடிதத்தில் தமிழகம் முழுவதும் பதிவு அலுவலகங்களுக்கு பதிவு பணியை மேற்கொள்ள வருகை தரும் பொதுமக்களிடம் பதிவுத்துறை இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் கூடுதலாக வழிகாட்டி மதிப்பினை உயர்த்தி பதிவு செய்ய வேண்டுமென சார் பதிவாளர்கள் தான்தோன்றித்தனமாக பொதுமக்களை வலியுறுத்தி பதிவு செய்ய வற்புறுத்துகின்றனர் எனவும் இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெரிவித்து கடிதம் எழுதி இருந்தேன்.

இந்த கடிதத்தினை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவிலிருந்து பதிவுத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு பரிந்துரைத்து அனுப்பி உள்ளனர்.

இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்ட புகாரினை
கவனத்தில் கொண்டு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (வழிகாட்டி) அவர்களின் கடித எண். ந. க. எண். 43355/ எல்1/2025. நாள். 30.10.2025, அன்று எனக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதில் எனது கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஒருவேளை (தான்தோன்றித்தனமாக பொதுமக்களை சார் பதிவாளர்கள் சொல்லும் புதிய மதிப்பிற்கு) வழிகாட்டி மதிப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 (A) – ன் கீழ் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்து, கூடுதல் பதிவுத்துறை தலைவர் அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்து அனுப்பப்பட்டுள்ளது.

பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்களே, தாங்கள் பதிவுத் துறை தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சந்தை மதிப்பை விட  முரண்பாடாக அதிகப்படியான வழிகாட்டி மதிப்புள்ள நிலங்கள் சம்பந்தமான பிரச்சனைகளை களைவதற்கு தமிழகம் முழுவதும் எந்த பதிவு அலுவலகத்தில்  (குறைவு முத்திரை சட்டப்பிரிவு) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 (1) இன் கீழ் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.மூர்த்தி அவர்களின் தலையீடும், அனுமதியும் பெறாமலும், மேலும் அமைச்சருக்கு உண்டான நிதி கொடுக்காமலும்  எங்கும் பதிவு செய்ய இயலவில்லை என்பது தங்களுக்கு நன்கு தெரிந்தும்,

இது குறித்து தங்களை நேரில் சந்தித்து பலமுறை புகார் தெரிவித்ததின் அடிப்படையில், இப்படிப்பட்ட சூழல் பதிவுத்துறையில் நிலவுவது தங்களுக்கு நன்கு தெரிந்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்களின் நலன் கருதி FAIRA சார்பில் நான் அனுப்பிய கடிதத்தின் மீது, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த கடிதத்தில் இப்படி ஒரு உண்மைக்கு மாறான தகவலை தெரிவிப்பது ஏற்புடையதாக இல்லை.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்திய முத்திரை சட்டப்பிரிவின் 47 (1) கீழ் சட்ட திருத்தம் எதுவும் மேற்கொள்ளாத சூழ்நிலையில், முரண்பாடு உள்ள வழிகாட்டி மதிப்புள்ள சொத்துக்களை பதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்களுக்கு நிதி கொடுக்காமல் பதிவு செய்வதற்கு தாங்கள்  உரிய நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares