அம்பேத்கரின் திருவுருவபடத்திற்குமலர்தூவி மரியாதை
![]()
கோவை புலியகுளம் அடுத்த பெரியார் நகரில், அன்னல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர்..
கோவை மாவட்டம் புலியகுளம் அடுத்த பெரியார் நகர் பகுதியில், அன்னல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பாக, அதன் மாவட்ட தலைவர் எம்எஸ் பார்த்திபன் தலைமயில், சர்க்கிள் தலைவர் கனேசன், வார்டு தலைவர் காந்தன், லூயிஸ், ஆகியொர் முன்னிலையில், அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரது திருவுருவச் படத்திற்கு முன்பாக அனைத்து நிர்வாகிகளும் உறுதிமொழியும் எடுத்து கொண்டு, அம்பேத்கரின் நினைவுகளை கோஷங்களாக எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயகுமார், ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் கோவை செல்வம், மாநகர் மாவட்ட பொருளாளர் செளந்தர் குமார், சிங்கை செல்வராஜ், சேவாதள செந்தில், சிங்காநல்லூர் சண்முகம், ராவகன், மணிகண்டன், வெங்கடாசலம், ஜெயராஜ், ஜெயபால், செல்வராஜ், சுப்ரமணியம், ரங்கசாமி, குழந்தையம்மாள், ராஜாமணி, கெளசல்யா, சங்கீதா,வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

