புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம்  துவக்கம்

Loading

கோவை
கோவை  விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை  சார்பாக  குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகள் அடங்கிய புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம்  துவக்கம்*
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் மகளிர் நலன் மற்றும் மகப்பேறு தொடர்பான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் தனது மருத்துவ பயணத்தில் புதிய துவக்கமாக குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ மையத்தை துவக்கி உள்ளனர்..
குழந்தைகளுக்கென விரிவான தனித்துவமான மையமாக மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி பேருந்து நிறுத்தம் அருகே, துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா,விமன்ஸ் சென்டர்  பை மதர்ஹூட்  மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர்(clinical director) டாக்டர் மிருதுபாஷிணி கோவிந்தராஜன்,தலைமையில் நடைபெற்றது..
இதில், பொறுப்பு இயக்குநர் அமித் குமார்,மற்றும் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டி நிர்வாகிகள் உட்பட முக்கிய விருந்தனர்கள் பலர்  கலந்து கொண்டனர்
புதிதாக துவங்கப்பட்டுள்ள குழந்தைக்களுக்கான சிறப்பு மருத்துவ மையத்தில்,பச்சிளம் குழந்தைகள் முதல் இளம் வயது குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கு என அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் இருப்பதாகவும்,குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பில்  பிரத்யேக ஆலோசனைகள் துவங்கி குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திற்கு  தேவையான அனைத்து விதமான சிகிச்சைகளுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் புதிய குழந்தைகள் நல சிகிச்சை மையத்தில்  இருப்பதாக மருத்துவர் மிருதுபாஷிணி கோவிந்தராஜன், தெரிவித்தார்..
0Shares