அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கும்பாபிஷேகம்
![]()
அருள்மிகு “ஸ்ரீ வனபத்ர காளியம்மன்” 21 அடி உயரத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழா
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை ஆற்றோரும் பிள்ளையார் கோவில் அருகில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் பாத்தியப்பட்ட இடத்தில், அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் 21 அடி உயர சிலை திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் புதன்கிழமை காலை தீர்த்த குடம் எடுத்தல், மாலை காலயாக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.
கார்த்திகை மாதம் 18 ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை பௌர்ணமி திதி கிருத்திகை நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும், தீபாரதனை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திமுக மாண்புமிகு இரா.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கும்பாபிஷேக விழாவினை, வனபத்ர காளியம்மன் ஆலய கமிட்டியார்கள் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் காளிதாஸ், செயலாளார் முரளி, துணைச் செயலாளர் ராஜு, பொருளாளர் கார்த்தி, தர்மகத்தா ராமு, ஓடுபிள்ளை கோபி, பூசாரிகள் பெரியசாமி, சீனிவாசன், பிரம்மஸ்ரீ இரா. ராமகிருஷ்ணன் பரம்பரை அறங்காவலர் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஓமலூர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

