பெண்கள்கவனிப்புப்பணி&தொழில்வளர்ச்சிபாதுகாப்பு
![]()
பெண்கள், கவனிப்புப் பணி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020
ரச்னா மெஹ்ராமனிதவள குழுத் தலைவர், அர்விந்த் நிறுவனம், குஜராத்
இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிலாளர் சந்தையில் பெண்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவது பிரிக்க முடியாத ஒன்றாகும். இந்தியாவில் பெண்களின் பொருளாதார பங்களிப்பில் மாற்றம் ஏற்பட்டிருப்பது கொள்கை வகுப்போராலும், உலகளாவிய நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கால முறையிலான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2023-24-ன் படி பெண்களின் பங்கேற்பு 41.7 சதவீதமாக இருந்தது. 2017-18-ல் 23.3 சதவீதம் என்ற அளவை விட இது கணிசமான அதிகரிப்பாகும். ஊதியம் பெறாத வீட்டுப் பணிகள், குடும்பங்களில் குழந்தைகள், முதியோர், பணி செய்ய இயலாதோர் ஆகியோரை ஊதியமின்றி கவனித்துக்கொள்வது போன்ற சவால்கள் உள்ளன. ஊதியமில்லாத கவனிப்பு பணிகளில் இந்தியப் பெண்கள் நாள்தோறும் சராசரியாக இரண்டு மணி 17 நிமிடம் செலவிடும் நிலையில் ஆண்கள் ஒரு மணி நேரம் 15 நிமிடம் மட்டுமே செலவிடுகின்றனர். இதனால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. இதையும் மீறிதான் தொழிலாளர் பங்கேற்பில் பெண்களின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. கல்வியின் மூன்றாம் நிலையில் பெண்கள் சேர்வதும், ஆண்-பெண் இடையேயான கல்வி இடைவெளி குறைவதும் இதற்கு காரணமாகும்.
இருப்பினும் உலக அளவில் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 2024-ல் 48.9 சதவீதமாகவும், கிழக்கு ஆசியா அளவில் இது 59.2 சதவீதமாகவும் உள்ள நிலையில், இந்தியாவில் பெண்கள் பங்கேற்பு சதவீதம் குறைவுதான். ஆனால், அண்மைக்காலத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஊரகப் பகுதிகளிலும், நகரங்களிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020 அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தொகுப்பு சமத்துவமற்ற பணி வாய்ப்பு நிலை, பணி இடங்களில் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதாக உள்ளது. மேலும், சுகாதாரம், நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றில் தரமான அளவீடுகளை உறுதி செய்வதோடு, முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கி பாலின சமத்துவ விரிவாக்கத்திற்கான கிரியா ஊக்கியாகவும் செயல்படுகிறது.
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020-ன் விரைவான அமலாக்கம் பெண் தொழிலாளர்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த பயன்படுவதோடு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த உதவும். போட்டித்தன்மை மிக்க, வலுவான பொருளாதாரத்தையும் உறுதி செய்யும்.

