தமிழகத்தின் முதல் கிளை குனியமுத்தூர் மெல்பான்
![]()
தமிழகத்தின் முதல் கிளையான குனியமுத்தூர் மெல்பான்(Melbaan) அரேபியன் டெஸ்ஸர்ட் வகை உணவுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்*
*வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை தொடர்ந்து லபான் டிலைட் 10 சதவீத தள்ளுபடியில் இரண்டு நாட்களுக்கு வழங்க உள்ளதாக குனியமுத்தூர் மெல்பான் உரிமையாளர்கள் அறிவிப்பு*
சவூதி அரேபியா,துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள பிரபலமாக உள்ள எகிப்தியன் டெஸ்ஸர்ட் வகை உணவுக்கு பெயர் போன மெல்பான் நிறுவனம் தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் தனது முதல் விற்பனை மையத்தை துவக்கியது..
துவங்கிய நாள் முதலே வாடிக்கையாளர்கள் குனியமுத்தூர் மெல்பான் கடையின் முன்பாக குவிய துவங்கினர்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த சுவையுடன் வழங்கப்படும் மெல்பான் டெஸ்ஸர்ட் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற குனியமுத்தூரில் உள்ள தமிழகத்தின் முதல் மெல்பான் டெஸ்ஸர்ட் மையத்தில் ஐம்பதாவது தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
துவக்க விழாவை முன்னிட்டு மெல்பான் டெஸ்ஸர்ட் லபான் டிலைட் வகைக்கு பத்து சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது..
டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் இரண்டு நாட்கள் இந்த தள்ளுபடி விற்பனையை வழங்க உள்ளதாக குனியமுத்தூர் மெல்பான் மைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்…
இந்நிலையில் இதற்கான விழாவில் பிரபல தொழிலதிபர் முகம்மது ஹாரிஸ் கலந்து கொண்டு சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்..
இது குறித்து குனியமுத்தூர் மெல்பான் விற்பனை மைய நிர்வாகிகள் கூறுகையில்,கேரளாவில் மெல்பான் பிரபலமாகியதை தொடர்ந்து தமிழகத்தில் முதன்மை மையமாக கோவை குனியமுத்தூரில் இந்த மெல்பான் மையம் துவங்கப்பட்டதாகவும்,மெல்பான் டெஸ்ஸர்ட் உணவை கோவை மக்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்வதாக தெரிவித்தனர்..
மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப லபான் டிலைட் வகைக்கு மட்டும் இரண்டு நாட்கள் பத்து சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்தனர்..
குறிப்பாக திருமணம்,பிறந்த நாள் விழாக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு 95399 99996 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மெல்பான் வகை டெஸ்ஸர்ட் ஆர்டரின் பேரில் வழங்கப்படும் எனவும் குனியமுத்தூர் மெல்பான் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்..
இந்நிகழ்ச்சியில் அமீர்,சிஹாப்,அஹ்மத்,அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

