FAIRA கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர்கள் தேர்வு
![]()
சென்னை
FAIRA கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர்கள் தேர்வு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான (FAIRA), நமது கூட்டமைப்பே – நமது வலிமை – நமது பெருமை – நமது அடையாளம் – நமது பாதுகாப்பு என்கின்ற தாரக மந்திரத்தை முன்னெடுத்து, தேசிய அளவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் ஒருங்கிணைத்து, அவர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் மற்றும் வளர்ச்சியையும் குறிக்கோளாக கருதி கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்டு தற்போது தேசிய அளவில் 14 மாநிலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் FAIRA கூட்டமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டு மிக வலிமையாகவும், அறிவார்ந்தும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வருகின்றது.
மேற்கண்ட வகையில் வலிமையோடும் – எழுச்சியோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் மாநில அளவிலான பொறுப்பாளர்களை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் இதுவரை ஏழு முறை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. தற்போது 2026 – 2027 ஆம் ஆண்டிற்கு எட்டாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்களுக்கான தேர்தல் கடந்த 30.11.2025 அன்று சென்னையில் அமைந்துள்ள பெயிரா கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று. தேசிய குழு, மற்றும் மாநில லே-அவுட் புரமோட்டர்ஸ் குழு, பில்டர்ஸ் குழு, ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்ஸ் குழு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில குழு என கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேசிய குழுவிற்கு பொதுச் செயலாளராக திரு.ஜெயச்சந்திரன், செயல் செயலாளராக திரு.கோவை செந்தில்குமார், நிர்வாகச் செயலாளராக திரு.அரியலூர் கிருஷ்ணகுமார், வளர்ச்சிச் செயலாளராக திருவண்ணாமலை திரு.நரேஷ்சந்த், பொருளாளராக திரு.சிகரம் சந்திரசேகர், துணைத் தலைவர்களாக திரு.கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் மற்றும் திரு.பிரசன்னகுமார், செயற்குழு தலைவராக திரு.வசந்தம் ஜவஹர், ஆலோசனை குழு தலைவராக திரு.நேரு நகர் நந்து, அமைப்புச் செயலாளராக திரு.வெங்கட்ராஜ் மற்றும் திரு.ராஜா பக்ருதீன் அலி அகமது, ஒருங்கிணைப்பாளர்களாக திரு.ஜெயராம் மற்றும் திரு.உதயகுமார், இணைச்செயலாளர்களாக திரு.பாலசண்முகம் மற்றும் திரு.கார்மேகம், துணைச் செயலாளர்களாக திரு.பாபு மற்றும் திரு.பாலசுப்பிரமணி, துணைப் பொருளாளராக திரு.சக்திவேல், ஆலோசனைக் குழு துணை தலைவராக திரு.செல்வம், செயற்குழு துணைத் தலைவராக திரு.லூர்துராஜ் பிரேம், ஆலோசனை குழு உறுப்பினர்களாக திரு.தனபால், திரு.தமிழரசன், திரு.கிஷோர், திரு.ஜெய்சங்கர், திரு.நிவாஸ், திரு.மோகன், திரு.கருப்பையா ராஜா, திரு.அசோக் ராஜா, திரு.ஹலீல் பாய்ஸ் மற்றும் திரு.லோகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக திரு. முனைவர் உசைன், திரு.முனீஸ்வரன், வழக்கறிஞர் திரு.மோகன் சுரேந்தர்ராஜ், சத்தியவேடு திரு.சீனிவாசன், ஹைதராபாத் திரு.மகேஷ் பாபு, மும்பை திரு.ரஞ்சித்குமார், பாலக்காடு திரு.வில்சன் P.தாமஸ், தலைமை நிலைய செயலாளராக திரு.கார்த்திக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில லே-அவுட் புரமோட்டர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக திரு.கும்பகோணம் பாலாஜி, பொதுச் செயலாளராக திரு.அச்சரப்பாக்கம் சிவக்குமார், செயல் செயலாளராக திரு.கிளமெண்ட் ரோசாரியோ, நிர்வாகச் செயலாளராக திரு.மாறன், வளர்ச்சி செயலாளராக திரு.கணேசன், பொருளாளராக திரு.ருனானா, செயற்குழு தலைவராக திரு.கலைவாணன், ஆலோசனை குழு தலைவராக திரு.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர்களாக திரு.தியாகராஜன் மற்றும் திரு.செல்லப்பெருமாள், ஒருங்கிணைப்பாளராக திரு.கோபிநாத் மற்றும் திரு.முத்துராமன், அமைப்புச் செயலாளராக திருமதி.கனிமொழி ராஜேஷ் கண்ணா மற்றும் திரு.குருகண்ணன், இணைச் செயலாளராக திருமதி.தரணிக்கரசி மற்றும் திரு.இசக்கிமுத்து, துணை செயலாளராக திரு. ஷானுவாஸ் மற்றும் திரு.கணபதி, ஆலோசனைக் குழு துணை தலைவராக திரு.உமாமகேஷ், செயற்குழு துணைத் தலைவராக திரு.பாஸ்கரன், துணை பொருளாளராக திரு.சங்கர், ஆலோசனை குழு உறுப்பினர்களாக திரு.ராகவன், திரு.விஸ்வநாதன், திரு.மெடிக்கல் நாராயணன், திரு.கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்களாக திரு.பாலகிருஷ்ணன், திரு.சுந்தரபாண்டியராஜா, திரு.திம்மராஜா, திரு.சுரேஷ், திரு.யுவராஜ், திரு.கண்ணன், திரு.தூயமணி, திருமதி.பிரியா ஹென்றி, திரு.மஞ்சுநாதன், திரு.இன்தியாஸ் மற்றும் திரு.சிவக்குமார் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில பில்டர்ஸ் குழுவிற்கு மாநிலத் தலைவராக திரு.கண்ணன் நந்தகுமார், பொதுச் செயலாளராக திரு.கமலஹாசன், செயல் செயலாளராக திரு.சாமிநாதன், நிர்வாக செயலாளராக திரு.கார்த்திக், வளர்ச்சி செயலாளராக திரு.விஜயபாரதி, பொருளாளராக கோவை திரு.கணேஷ்குமார், செயற்குழு தலைவராக திரு.கோவை ராமநாதன், ஆலோசனை குழு தலைவராக திரு.சத்தியம் சுதாகர், துணைத் தலைவர்களாக திரு.skm சுரேஷ்குமார் மற்றும் திரு.திருவண்ணாமலை நாகராஜ், ஒருங்கிணைப்பாளர்களாக திரு.பாஸ்கரன் மற்றும் திரு. ஜெகதீஷ் தண்டபாணி, அமைப்புச் செயலாளராக திரு.முரளிதரன் மற்றும் திரு.வேப்பூர் தாசன், இணைச்செயலாளர்களாக திரு.வாமணன் மற்றும் திரு.திலோக்சன்த் பன்சாலி, துணை செயலாளர்களாக திரு.லலித்குமார் மற்றும் திரு.பெருமாள், துணை பொருளாளராக திரு.ஃபைசல் அகமது அலி, ஆலோசனைக் குழு துணைத் தலைவராக திரு.பிரிமியர் ஸ்ரீராம், செயற்குழு துணைத் தலைவராக திரு.தீன் முகமது, ஆலோசனை குழு உறுப்பினர்களாக திரு.ஜெயப்பிரகாஷ், திரு.தில்லைவாணன், திரு.எஸ்.கே.ஆர்.விஜி, திரு.கார்த்திக் மற்றும் திரு.யுவராஜ், செயற்குழு உறுப்பினர்களாக திரு.கோபாலகிருஷ்ணன், திரு.ஜெயராஜ், திரு.மாணிக்கம், திரு.வேல்முருகன், திரு.அக்ஷய பிரகாஷ், திரு.ராமசாமி, திரு.தினகரன் மற்றும் திரு.சரவணன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக திரு.பாலசுப்பிரமணி, பொதுச் செயலாளராக திரு.கும்பகோணம் சம்பத், செயல் செயலாளராக திரு.ரமேஷ் குமார், நிர்வாக செயலாளராக திரு.ஹரிகிருஷ்ணன், வளர்ச்சி செயலாளராக திரு.ராம்காந்த், பொருளாளராக திரு.சுரேஷ்குமார், துணை தலைவர்களாக திரு.ஜெய் சசிகுமார் மற்றும் திரு.யோகநாதன், ஒருங்கிணைப்பாளர்களாக திரு.சபியுல்லா மற்றும் வேலூர் திரு.வெங்கடேசன், அமைப்புச் செயலாளர்களாக திரு.பாலாஜி ரமேஷ் மற்றும் திரு.பாலவசந்த், இணைச் செயலாளர்களாக திரு.முரளி மற்றும் திரு.சுதர்சன், துணைச் செயலாளராக விழுப்புரம் திரு.வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்களாக திரு.பால் அண்ணா, திரு.சௌந்தரராஜன், திரு.எஸ்.எஸ்.தேஜஸ்வினி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில தலைவராக திரு.அன்பரசு, பொதுச் செயலாளராக திரு.அமர் என்கிற திரு.மணிசேகர், செயல் செயலாளராக திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாக செயலாளராக திரு.சுரேஷ்குமார், வளர்ச்சி செயலாளராக திரு.சக்திவேல், பொருளாளராக திரு.முத்து என்கிற முத்தாலப்பன், ஆலோசனை குழு தலைவராக திரு.முத்துக்குமரன், துணை தலைவராக திரு.ஆனந்தன், அமைப்புச்செயலாளராக திரு.கந்தன், துணைச் செயலாளராக திரு.கனகராஜ் ஆகியோர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் FAIRA கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (CMDA, DTCP), வருவாய்த்துறை, நகர்ப்புற உள்ளாட்சி (மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி) , ஊரக உள்ளாட்சி (கிராம ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்கள்), பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) ஆகிய துறைகளில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் – எழுச்சிக்குமான ஆகச்சிறந்த சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், மேற்கண்ட துறைகளினால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்ட திட்டங்கள், கொள்கை முடிவுகள், நடைமுறை மாற்றங்கள். அதிகார பகிர்வுகள், அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் மக்களுக்கு நலம் பயப்பவைகளை பாராட்டியும், பொருந்தாத சட்டதிட்டங்களை மாற்றி அமைப்பதற்கும், மக்களுக்கான மகத்தான சட்டதிட்டங்களை சேர்ப்பதற்கும், மக்களை பாதிக்கின்ற சட்டதிட்டங்களை நீக்குவதற்குமான முக்கிய பணிகளை முன்னெடுத்து செயலாற்றி வந்தது. அதேபோன்று தற்பொழுது பெயிரா கூட்டமைப்பின் 8வது தேசிய மற்றும் மாநில குழுவிற்கு பொறுப்பாளர்களாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களும் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தங்களின் பொறுப்புக்குரிய கடமையை உணர்ந்து கண்ணியம் காத்து, பொறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும், அறிவார்ந்தும் செயல்பட வேண்டும் என புதிய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தி, நிச்சயம் கட்டுமானம் மற்றும் மனை வணிகத்தின் வளர்ச்சிக்கும் – எழுச்சிக்கும் இவர்களின் பணியும் செயல்பாடுகளும் அமையும் என்பதனை உறுதிப்பட தெரிவித்து, எட்டாவது குழுவிற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இந்த கூட்டமைப்பின் நிறுவனர் என்ற முறையில் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஆ.ஹென்றி,
நிறுவனர் – தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார்

