காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
![]()
*காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை. டிசம்பர் 03,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர். சீனிவாசன் தலைமை தாங்கினார் .
கள்ளக்குறிச்சி மாவட்ட மேலிட பார்வையாளரும் பஞ்சாப் மாநில பொருளாளரும் பதன்கோட் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அமித்விஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடையே கருத்துகளைக் கேட்டறிந்து பின்னர் கட்சியின் வளர்ச்சியை குறித்து விளக்க உரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், வழக்கறிஞர் சுரேஷ், மீடியா முருகன், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இறுதியாக
செய்தியாளர்களை சந்தித்து பெற்று அளித்த அமித்விஜ் கட்சி தலைமையின் முடிவின்படி சரியாக பணி செய்பவர்களுக்கு மாவட்ட பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார் அப்பொழுது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அது கட்சியின் தலைமை முடிவு செய்யும் என கூறினார்.
—————————— —-
உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளரும் பஞ்சாப் மாநில பொருளாளரும் பதன்கோட் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அமித்விஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றிய போது எடுத்த படம். உடன் மாநில துணை செயலாளர் முனைவர்.சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

