துடியலூர் சேலம் ஆர் ஆர் பிரியாணியின் புதிய கிளை

Loading

கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே சேலம் ஆர் ஆர் பிரியாணியின் புதிய கிளையை அதன், நிறுவனர் ஆர் ஆர் தமிழ்செல்வன் திறந்து வைத்தார்
கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் புதியதாக சேலம் ஆர் ஆர் பிரியாணியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ஆர் ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ ரவி ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். மேலும் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் மிக பிரபலமாக உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி கடை. இதற்கு உலகம் முழுவதிலும் 100 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் புதிதாக சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் கிளை திறக்கப்பட்டுள்ளது.
இக்கடையினை சேலம் ஆர் ஆர் பிரியாணி நிறுவனர் ஆர் ஆர் தமிழ்செல்வன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ ரவி ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். மேலும் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.
காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை கடை செயல்படும் இக்கிளையில் ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தும் வகையில் இரு தளங்கள் உள்ளன. இங்கு பிரியாணி மட்டும் இன்றி இட்லி, தோசை, பரோட்டா, சைவ அசைவ சாப்பாடு, சைனீஷ், நான், ரொட்டி, கிரில், தந்தூரி உள்ளிட்ட அனைத்து வகை உணவுகளும் கிடைக்கும். மேலும் குடும்ப விழாக்கள் நடத்தும் வகையில் ஹால் வசதியும் உள்ளது.
திறப்பு விழா சலுகையாக ஒரு பக்கெட் சிக்கன் பிரியாணிக்கு ஒரு கிரில் சிக்கன் இலவசமாகவும், ஒரு பக்கெட் மட்டன் பிரியாணிக்கு ஒரு கிரில் சிக்கன் இலவசமாகவும் வழங்கப்பட்டன. மேலும் 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணியும், ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் 65 இலவசமாகவும் வழங்கப்பட்டது. கிளை திறப்பு விழாவிற்கு முன்பே வாடிக்கையாளர் குவியத்தொடங்கினர். தொடர்ந்து கிளை திறந்ததும் நீண்ட வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் பிரியாணியினை வாங்கிச் சென்றனர். எதிர்பார்த்ததை விட வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததாக கிளை உரிமையாளர்கள் ராஜா மற்றும் காஜா மைதீன் ஆகியோர் தெரிவித்தனர்.
இத்திறப்பு விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, முன்னாள் குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் பி வி மணி மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் கிளை உரிமையாளர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர் ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன் பேசும் போது நம்மிடம் வரும் வாடிக்கையாளர் வயிறு நிறையும் வகையில் உணவு வழங்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் நன்றாக உழைத்து முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி டி நாயுடு பெயரை வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
0Shares