மாற்று சங்கத்தினர் அண்ணா தொழிற்சங்கத்தில்
![]()
திருவள்ளூரில் வாணிப கழக அங்கீகார தேர்தலை முன்னிட்டு முதல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்று சங்கத்தினர் அண்ணா தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி :
திருவள்ளூர் நவ 29 : வருகிற 10 ஆம் தேதி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நடைபெற இருக்கின்ற அங்கீகார தேர்தலை முன்னிட்டு முதல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்று சங்கத்தினர் அண்ணா தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில செயலாளர் சிவன் முன்னிலை வகித்தார். இதில் மாநில இணை செயலாளர் தமிழ்செல்வன், மண்டல தலைவர் அரசு, மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்று சங்கத்தில் இருந்து அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய அவர், நடைபெற உள்ள தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவித்து அங்கீகாரம் வழங்கப்படும் என்பதால் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 754 வாக்காளர்களில் குறைந்தபட்சம் 10,000 வாக்குகளையாவது நான் பெற வேண்டும் என்றும், இந்த வீடியா திமுக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்த அரசாங்கமாக காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதையும் செய்யவில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் 4500 பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி 4500 பருவகால பணியாளர்களையும் நியமித்திருக்கிறோம். ஆனால் இந்த திமுக அரசில் 302 பேரை மட்டுமே பணி நியமனம் செய்திருப்பதாகவும், இதனால் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 60 முதல் 70 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் முதன்மை தொழிற்சங்கமாக அண்ணா தொழிற்சங்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் போக்குவரத்து துறையை தனியாருக்கு தடை வார்ப்பது, டாஸ்மாக் நிறுவனத்தில் வேலை பளு , பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்வது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு தொழிலாளர்கள் ஆளாகின்றனர். அதே போல் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவகால தொழிலாளர்களை பழிவாங்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர். எனவே 2026-ல் மீண்டும் அம்மா ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் போது இந்த தொழிலாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர அதிமுக செயலாளர் ஜி.கந்தசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பி.வி.பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.பி.எம்.எழிலரசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் எஸ் ஏ.நேசன் நகர அம்மா பேரவை தலைவர் ஜோதி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயகாந்தன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

