இயற்கைசார்ந்த மருத்துவ சேவைக்கு சிறப்புதிட்டம்

Loading

கோவை
கோவையில், சுமார் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமை மண்டலத்தை உருவாக்கிய கோவை தொழிலதிபர், இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளதாக பேட்டி.
கோவையில், மக்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுவையான உறவை கொண்டுள்ள கே.ஆர் பேக்ஸ் நிறுவனம், இன்று தென்னிந்தியாவில் 23 முக்கிய நகரங்களில் 70 விற்பனை நிலையங்களைக் கொண்டு பேக்கரி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது.
கோவையை தனது அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்த இந்த மாவட்டத்திற்கும் அதன் சுற்றுசூழலுக்கும் கைமாறு செய்யும் வகையில், சுமார் 50 ஏக்கரில் ஒரு பசுமை மண்டலத்தை உருவாக்கி உள்ளது.
என்றும் பரபரப்பாக உள்ள கோவை மாவட்டத்தின் நவக்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் செழிக்கவும், மாசடைந்த காற்றை தன்னுள் கொண்டு சுத்திகரித்து சுத்தமான காற்றை வழங்கும் ஒரு பெரும் மண்டலமாகவும் உள்ளது கே.ஆர். தோட்டம்
“பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கான ஒரு பெரிய பசுமையான சரணாலயத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவகாரை கிராமத்தில் 50 ஏக்கர் நிலத்தை நாங்கள் வாங்கினோம். இன்று, இப்படிப்பட்ட இயற்கைக்கான அரும்பணிகளால் எதை சாதிக்க முடியும்? என யாரவது கேட்டால் இதோ இப்படி ஒன்றை சாத்தியமாக்க முடியும் என கூறும் அளவுக்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாக இந்த நிலம் உள்ளது என்பதை கோவை, மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கே.ஆர் பேக்ஸின் நிறுவனர்  கே.ஆர். பாலன் மற்றும் இயக்குநர் பி. சுஜித் ஆகியோர் தெரிவித்தனர்.
ஒரு காலத்தில் தரிசு நிலமாக இருந்த இந்த பகுதி, கே.ஆர் பேக்ஸ் குடும்பத்தின் 14 ஆண்டுகால தொடர்ச்சியான முயற்சியால் செழிப்பான பச்சை வனமாக மாறியுள்ளது. இந்த இடம், பல்லாயிரக்கணக்கான நாட்டு மரங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள், எண்ணற்ற பறவைகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்களுக்கு இளைப்பாறும் இடமாக உள்ளது.
கே.ஆர் பேக்ஸின் இயக்குநர் பி. சுஜித் பேசுகையில், “நாங்கள் இந்த நிலத்தை வாங்கியபோது, இந்த வளாகத்தில் ஏற்கனவே ஒரு பெரிய ஆலமரமும் சுமார் 10 தென்னை மரங்களும் இருந்தது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். இன்று, நாங்கள் இங்கே 50,000 மரங்களை நட்டுள்ளோம்,” என கூறினார்.இது நிலத்துடன் இவர்களுக்கு உள்ள ஆன்மீக தொடர்பை அடையாளப்படுத்தும் விதமாக இந்த பசுமையான சோலைக்கு மத்தியில், ஒரு சிறிய கோவிலும் உள்ளது.
கே.ஆர். பேக்ஸ் நிர்வாகம் இந்தப் பண்ணையை பொதுமக்களும் வந்து ரசித்து, பயன் பெற பொது வருகைக்கு இதை  திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில், இது அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு பசுமைப் புகலிடமாக மாறும் என தெரிவித்தார்.
0Shares