விசைத்தறி உரிமையாளர்சங்கச்செயலாளர்அசோகன்

Loading

மத்திய அரசின் ரயான் பஞ்சு இறக்குமதி விதிகள் ரத்து குறித்த தவறான தகவல்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் ரயான் பஞ்சு இறக்குமதி விதிகள் ரத்து குறித்த தவறான தகவலை விசைத்தறி தொழிலில் இல்லாமல் பெயரளவில் நெசவாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் வாயிலாக அறிக்கை வெளியிட்டதை வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. அந்த அறிக்கையில்  வெளியிடப்பட்ட ரயான் துணி உற்பத்தி இலக்கு உயரும் என்றும், விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது உண்மைக்குப் புறம்பானது என்றும், உற்பத்தி அதிகரிப்புக்கு சாத்தியமில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ், சித்தோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் ராக்கி அண்ணன், வீரப்பன் சத்திரம் விசைத்தறி உரிமையாளர் சங்கச் செயலாளர் அசோகன், லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டோர் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.*
0Shares