ஈரோட்டில் அப்போலோ பல்மருத்துவமனை திறப்பு
![]()
ஈரோடு
ஈரோடு மாநகரில் டாக்டர் அப்போலோ பல் மருத்துவமனை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல் மருத்துவமனையை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் முன்னாள் எம்பி கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், டாக்டர்.அப்போலோ பல் மருத்துவமனை நிறுவனர் தண்டாயுதபாணி, டாக்டர்.கார்த்திகேயன், டாக்டர்.கிருத்திகா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனையின் திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றி மருத்துவமனையின் ஒவ்வொரு அறைகளையும் அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். டாக்டர் அப்போலோ மருத்துவமனையின் பல் மருத்துவமனையினால் பயனாளிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திறப்பு விழா சலுகையாக பல் மருத்துவ சிகிச்சைக்கு 20% தள்ளுபடி (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

