அதிநவீன மின்னணு வாகனத்தில் குறும்படம்

Loading

நீலகிரி
உதகை மேல்கோடப்பமந்து பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொது மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி ல் அதிநவீன மின்னணு வாகனத்தில் குறும்படம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட மேல்கோடப்பமந்து பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 19.11.2025 அன்று நேரில் பார்வையிட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டது. வீடு தோறும் கணக்கீட்டு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளதால், இது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்ட குறும்படம் மற்றும் THE ELEPHANT WHISPHER படத்தில் நடித்து ஆஸ்கார் விருது பெற்ற திரு.பொம்மன் மற்றும் திருமதி பெள்ளி ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அளித்த விழிப்புணர்வு பேட்டியினை பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தொடர்ந்து ஒளிபரப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நேற்றைய தினம் உதகை நகராட்சிக்குட்பட்ட மேல்கோடப்பமந்து பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
0Shares