இந்திய சர்வதேச அறிவியல் விழா2025-சிஎஸ்ஐஆர்
![]()
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை
இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-க்கான முன்னோட்ட நிகழ்வை சிஎஸ்ஐஆர்- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியது
புதுதில்லி, நவம்பர் 20, 2025


சென்னையிலுள்ள சிஎஸ்ஐஆர்–மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், 11-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-க்கான முன்னோட்ட நிகழ்வை நவம்பர் 20, 2025 அன்று சென்னையில் நடத்தியது.
“தற்சார்பு இந்தியாவிற்கு அறிவியல் மூலம் செழிப்பு” என்ற ஐஐஎஸ்எஃப் கருப்பொருளுடன் இணைந்து, அறிவியல் சொற்பொழிவுகள் மற்றும் ஊடாடும் ஆய்வக பார்வையிடல் மூலம் இளம் மனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ இயக்குநர் டாக்டர் கே.ஜே. ஸ்ரீராம் தனது தொடக்க உரையின் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்புத் துறையில் சுய-நிலைத்தன்மைக்கான அறிவியல் சாதனைகளையும், தேசிய இலக்குகளை அடைவதில் தோல் தொழில்கள் மேம்பாட்டிற்கு சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ அளித்த ஆதரவையும் நினைவு கூர்ந்தார். ஐஐஎஸ்எஃப் -2025 இன் முக்கிய அம்சங்களை விஞ்ஞான் பாரதியின் உறுப்பினரும், மாணவர் அறிவியல் சிந்தனைப் போட்டியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், திருமதி எஸ் ஷ்யாமளா எடுத்துரைத்தார்.

