போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Loading

திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 20 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் கமலா திரையரங்கம் அருகில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு உறுதிமொழி மற்றும் வீதி நாடகம் ஆகியவை நடத்தப்பட்டு திருத்தணி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.Nasamuth Bharath Abiyan 5 ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் “போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருத்தணி தனியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து திருத்தணி கமலா திரையரங்கம் முதல் திருத்தணி நகராட்சி அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சென்றனர்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி,திருத்தணி வட்டாட்சியர் ஜே.குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரமேஷ், பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மலர்விழி, கல்லூரி முதல்வர் எஸ்.ஆறுமுகம் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், பேராசிரியர்கள், 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், நகராட்சி மேலாளர், காவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares