உபரி நீரை வீணாக கொசஸ்தலை ஆற்றில் திறப்பு
![]()
திருவள்ளூர் நவ 19 :
சோழவரம் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் தண்ணீர் புகுந்துவிடுவதை சீர் செய்து தருவதாக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ உத்தரவு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடி வரை நீரை சேமிக்க முடியும். ஆனால் தற்போது மழை காலங்களில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் உபரி நீரை வீணாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு திறந்து விடும் போது, கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கின்றனர். ஆனால் சோழவரம் ஒன்றியம் விச்சூர் அடுத்த எழில் நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும் போது இந்த கிராமத்திற்கு தண்ணீர் புகுந்துவிடுகிறது.
இது குறித்து தொடர்ந்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார்கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த ஆண்டு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்த போது, அடுத்த மழை காலத்திற்குள் இதற்கு மேம்பாலம் கட்டித் தரப்படும் என்றும் கிராமத்திற்கு தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைப்பட கடிதம் எழுதி கொடுத்துவிட்டு சென்றவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போ து தண்ணீர் திறந்து விட்டிருப்பதால் மீண்டும் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே கிராமத்திற்குள் தண்ணீர் புகாதவாறு மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

