குன்னூர் பேரக்ஸ் சிங்காரதோப்பில் சிறுத்தை
![]()
நீலகிரி
குன்னூர் அருகே பேரக்ஸ் சிங்காரதோப்பு பகுதியில் உலா வரும்சிறுத்தை சிசிடிவி காட்சிகளில் வைரல்
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் குறிப்பாக கரடிகள், சிறுத்தைகள்,கருஞ் சிறுத்தைகள்,இரவு மற்றும் பகல் வேலைகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கம் ஆகிவிட்டது.
இந்நிலையில் அதிகாலை குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் சிங்காரத்தோப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வீட்டு பகுதியில் வைக்கபட்டு இருந்த தண்ணீர் குடித்து விட்டு,அங்கும் இங்கும் உணவை தேடி நோட்டமிட்ட சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

