10 அம்ச கோரிக்கை ஜாக்டோ-ஜியோபோராட்டம்
![]()
திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் :
திருவள்ளூர் நவ 19 : திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி நுழைவு பகுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்துதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், ஞானசேகரன், சே.பிரபாகரன், சீ.காந்திமதி நாதன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் முதுநிலை அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய மதிப்பூதிய நிலையில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 5 லட்சம் பேர் தமிழ்நாடு முழுக்க இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என அறிவித்த முதல் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். 243 அரசாணையை ரத்து செய்திட வேண்டும். அதே போல் ஊராட்சி ஊழியர்கள, ஊர்ப்புற நூலக ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் என அத்தனை நிலையிலும் இவர்களது ஒரு கோரிக் கையை கூட விடியா அரசு நிறைவேற்றவில்லை. போராட்டம் காரணமாக நாங்கள் சாலைக்கு வந்துவிட்டோம். அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று மூடப்பட்டு இருக்கிறது. பணியில் இருக்கும் போது லட்ச ரூபாய் ஊதியம் பெற்று வந்த அரசு ஊழியர் இன்று அத்து கூலிகளாக பெயிண்ட்டராக, தினக்கூலிகளாக சென்று கொண்டிருக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை முதுகெலும்பு என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் ஏன் எங்கள் முதுகெலும்பை உடைக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர்.
எஸ்ஐஆர் பணிக்கு போதிய பயிற்சி தராமல், கால அவகாசமும் தராமல் தமிழக அரசு அலைக்கழிப்பதாகவும், பெண் ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாவும், வட்டாட்சியர் அளவில் அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த பணி செய்பவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கோரிக்கையை ஏற்று அறிவிக்க வேண்டும். இன்றைய முதல்வர் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறியிருக்கிறார். தரவில்லை என்றால் நாங்கள் கண்டிப்பாக தர வைப்போம் என்றும் தெரிவித்தனர்.

